கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களால், ரொறன்ரோவில் திறக்கப்பட்ட தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
மைக்கேல் கரோன் (Michael Garron) மருத்துவமனையால் இயக்கப்படும் தோர்ன்க்ளிப் பார்க் (Thorncliffe Park) சமூக மையத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில், இந்த வாரம் எவருக்கும், தடுப்பூசிக்கான பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.
விநியோக பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை புதிய பதிவுகளை மேற்கொள்வதில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நோர்த் யோர்க் பொது மருத்துவமனையும், செனெகா (Seneca ) கல்லூரியில் உள்ள சமூக மருந்தகத்தை ஏப்ரல் 17ஆம் நாளுடன் மூடுவதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 26ஆம் நாள் வரை இந்த மருந்தகம் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.