பருவநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் இந்தியா, எந்தவிதமான நெருக்கடிக்கும் அடிப்பணியாது என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரான்ஸ் தூதுவரை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக செயற்படுத்தி வரும் ஒரே நாடு இந்தியா தான்.
கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட மாசுபாடு காரணமாக உலகமே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.