மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் நான்கு பிள்ளைகளும் இறுதி ஊர்வலத்தில், அவரது பேழையுடன் நடந்துச் செல்வார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இளவரசர் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட் மற்றும் இளவரசி அன்னே, மற்றும் பேரன்கள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் விண்ட்ஸரின் செயின்ட் ஜோர்ஜ் சேப்பலுக்கு ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இறுதி சடங்கிற்கான விருந்தினர் பட்டியலில் 30 பேர் உள்ளனர். இதில் மூன்று ஜேர்மன் உறவினர்கள் உள்ளனர்.
மேலும் மாகா ராணியார் பிரத்தியேகமான வாகனத்தில் இருக்கவுள்ளதோடு, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.