ஒன்ராறியோவில் அடுத்தமாத இறுதியில் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் தொடக்கம் 18 ஆயிரம் வரை உயரக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த மாத இறுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மூன்றில் இரண்டு பங்கு படுக்கைகள் நிரம்பும் நிலை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ளதை போன்ற தொற்று பரவல் நிலை நீடித்தால், மே மாத இறுதியில் இந்த நிலை ஏற்படும் என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில், 1600 தொடக்கம் 1800 வரையானோரை அனுமதிக்கும் நிலை ஏற்படும் என்றும் பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 300 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளே உள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை நிரம்பும் நிலை ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.