கடந்த 3 மாத காலப்பகுதியில் சுமார் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற படை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இராணுவத் தளபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”பிரிவனைவாதத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் செயற்படுகின்ற நிலையிலும், தமிழ் இளைஞர்கள் இவ்வாறாக இராணுவத்தில் இணைந்துகொள்ள முன்வந்திருப்பது இராணுவத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியே” என்று இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கலந்துரையாடலின் போது, கொரோனா தொற்று நிலைமையில் பொதுமக்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக இராணுவம் மற்றும் விமானப் படையினர் முன்னெடுத்த சேவையை இராணுவத் தளபதி பாராட்டியுள்ளார்.