பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக குஜராத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
குஜராத்தின் ஜஹூவ் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில், சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை கடலோரக்காவல் படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது, 30 கிலோ ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த படகு பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, போதைப்பொருள், மற்றும் படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த படகில் இருந்த 8 பாகிஸ்தானியர்களையும், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.