தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் இன்று சுமந்திரனைச் சந்தித்து வழக்குத் தொடர்வது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை கையளித்திருந்தனர்.
அதன் பின்னர் கருத்து வெளியிட்ட சுமந்திரன், குருந்தூர்மலை சம்மந்தமாக சில வருடங்களுக்கு முன்பிருந்தே குருந்தூர் மலை தொடர்பில் பிணக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டு அதிலே ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது
அந்த வழக்கின் பிரதிகளை ரவிகரன் என்னிடத்தில் கையளித்துள்ளார். வெகுவிரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.