ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் அடுத்த வாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசி குறித்த பரிந்துரையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தேசிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதுகாப்புக் குழு விரைவான பரிந்துரையை வழங்கும் வரை ஏற்கனவே பெறப்பட்ட மருந்து அளவுகளை சேமிக்க பரிந்துரைத்ததாகவும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க மத்திய சுகாதார முகவரகம் 50 வயதிற்கு உட்பட்ட ஆறு பெண்கள் தடுப்பூசியை பெற்ற பிறகு அரிய இரத்த உறைவினால் பாதிக்கப்பட்டதாக உறுதிசெய்தது. இதனால் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி பரிந்துரைத்தது.