லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெய்நிகர் நாடாளுமன்ற அமர்வின் போது, நிர்வாணமாக படம்பிடிக்கப்பட்டமை தொடர்பாகவும் அந்த படம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டமை குறித்தும் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கனடிய நாடாளுமன்ற பொதுச் சபையின் சபாநாயகரிடம், ஆளும்கட்சித் தலைவர் Pablo Rodriguez கோரிக்கை விடுத்துள்ளார்.
கியூபெக் நாடாளுமன்ற உறுப்பினர் William Amos உடை மாற்றும், நிர்வாணமாக நிற்கும் காட்சிகள் அடங்கிய படம் வெளியிடப்பட்டது ஒரு மோசமான குற்றச் செயல் என்றும், இதற்கு பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கும்ம் விசாரணைகள் நடத்தப்பட்ட வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.