தமிழ், சிங்கள புத்தாண்டு கால வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று 14 உயிரிழப்புகள் பதிவாகியிருந்ததுடன், அதற்கு மறுநாள் 15 ஆம் திகதி 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்துகளில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்களின் மூலம் இடம்பெற்றவை என்றும், இதன்படி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன