முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் 18 இல் நடக்கவிருந்த முதுநிலை நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முதுநிலை நீட்தேர்வு ஏப்ரல் 18 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.