ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் இந்த நடவடிக்கைகள், ரஷ்யாவின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பாரிய ‘சோலர் விண்ட்ஸ்’ இணைய ஊடுருவலுக்கு பின்னால் ரஷ்ய உளவுத்துறை இருந்ததாகவும், 2020ஆம் ஆண்டு தேர்தலில் மொஸ்கோ தலையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.