ஸ்காபறோ சுகாதார வலையமைப்பில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
விஜய் தணிகாசலம், ரேமண்ட் சோ, கிறிஸ்டினா மிட்டஸ், அரஸ் பாபிகியன் ஆகியோர் கூட்டிணைந்தே அக்கடிதத்தினை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமைக்கான தெளிவுபடுத்தல் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், தடுப்பூசி விநியோகம் தடையின்றி தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமரிடத்தில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரையிலான காலத்தில் ஒன்ராரியோ மாகாணம் பெற்றுக்கொண்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் திகதிவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அடுத்து வரும் காலத்தில் ஒன்ராரியோவுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளின் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.