இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.
வின்சர் கோட்டையில் இருந்து அவரது உடல், ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹரி மற்றும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேவாலயத்தில் பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்ததும், வின்சரின் மதகுரு அஞ்சலி செலுத்தினார். நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது.
அதன்பின்னர் இளவரசர் பிலிப் உடல், தேவாலயத்தின் அடியில் உள்ள கல்லறைப் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கு மற்றும் ஊர்வலத்தில் 700இற்கும் மேற்பட்ட ஆயுதப்படையினர் பங்கேற்றனர்.
எனினும், கொரோனா கட்டுப்பாடு காரணமாக புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் 30 பேர் மட்டும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.