இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அதேபோல, அடக்குமுறை, அச்சுறுத்தலுக்கு பயந்து ஒளிந்தோடும் இனம் நாங்களல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்ட மூலங்களை ஏற்படுத்த திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராக போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
சில சந்தர்ப்பவாத தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மௌனித்திருக்கப் போவதில்லை. ஒரு சிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாயை மூடிவிட பார்க்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.