கொழும்பு துறைமுக நகரை நிர்வகிக்கும் சட்ட மூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பின்னால், வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இசைவானது என்று சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்த பின்னரே அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டது.
இந்தச் சட்டம் தொடர்பாக விஜேதாச ராஜபக்சவுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால், அவர் கட்சி கூட்டங்களில் அதனைத் தெரிவித்திருக்க வேண்டும். அவர் ஒருபோதும் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் வெவ்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயற்படுகிறார்கள், சில வெளிநாட்டு சக்திகள் அவர்களின் பின்னால் உள்ளன.
எனினும், இதுகுறித்து உயர் நீதிமன்றம் இதுகுறித்து முடிவு செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.