ஒன்ராறியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று இரண்டாவது நாளாக இதுவரை இல்லாமல், அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
வியாழக்கிழமை, முன்னொருபோதும் இல்லாதளவாக, 4 ஆயிரத்து 736 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நேற்று, இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஏழு நாள் சராசரியும், தற்போது, 4 ஆயிரத்து 292 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளில் 6.3 வீதமானோருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.
நேற்று 8.2 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.