ஒன்ராரியோவுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ஒட்டாவில் உள்ள பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஒன்ராரியோவில் நிலைமைகள் மோசமடைந்துள்ளமையைகருத்திற் கொண்டுஇந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி விநியோகத்தினை சீராக்கல் மற்றும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனத்தில் எடுத்து சிகிச்சை வழங்கல், மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை ஆகிய விடயங்களில் கரிசனை கொண்டுள்ளதாக பிரதமர் அலுலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.