கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமூலமானது அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார்
“துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது அரசியல் யாப்புக்கு முரணானவை அல்ல என்பதை நான் உங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இந்த மசோதா அரசியலமைப்பின் 13 வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் விதிக்கப்பட்ட எந்தவொரு தடைக்கும் உட்பட்டது அல்ல, அவை பாராளுமன்றத்தால் இயற்றப்படலாம்” என சட்டமா அதிபர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகர சட்டமூலம் தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் கலாநிதி பீ.பி ஜயசுந்தர சட்டமா அதிபருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.