நோர்த் யோர்க் பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 6.45 மணியளவில், Lawrence Avenue West இன் வடக்குப் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து விரைந்து சென்ற அவசர உதவிப் பணியாளர்களால், படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
Queens Drive பகுதி முனையில் இருந்த கட்டடம் ஒன்றின் பின்னால் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் இன்னமும் இனங்காணப்படவில்லை என்றும் சுட்டவர் தொடர்பான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.