ஜப்பானிய பிரதமர் யோஷி ஹிடே சுகா, (Yoshihide Suga) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரசு முறை பயணமாக ஜப்பானிய பிரதமர் யோஷிஹைடே சுகா, (Yoshihide Suga) அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் அவர், ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், வெளிநாட்டு் தலைவர் ஒருவருடன், நடத்தியுள்ள முதலாவது, நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பின்போது இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்தும், பிராந்திய நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை உறுதி செய்ய குவாட் அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தியுள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், வடகொரியாவின் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.