மியன்மாரில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 23ஆயிரத்து 184 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அந்த நாட்டு சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதானவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 141 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மியன்மாரில் நிலைகொண்டுள்ள மனித உரிமைகள் அமைப்பொன்று அறிவித்துள்ளது.