மேலதிகமாக 8 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, பைசர் (Pfizer) நிறுவனத்துடன், கனேடிய அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து கீச்சகப் பதிவு ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,
“மேலதிகமாக பைசர் நிறுவனத்தின் 8 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை பெறுவதற்கு உடன்பாடு செய்துள்ளோம்.
மே மாதத்தில் 4 மில்லியன் தடுப்பு மருந்துகளையும், ஜூனில் 2 மில்லியன், ஜூலையில் 2 மில்லியன் தடுப்பு மருந்துகளையும் மேலதிகமாக பெறுவோம்.
இதன் மூலம் அதிகமான மக்கள் வேகமாக தடுப்பூசிகளைப் பெற முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.