யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் மற்றும், சுயதனிமைப்படுத்தலில் இருந்த இருவர் என மூவருக்கு, யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள, இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் நேற்று தொற்று இனங் காணப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.