யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில், குழுக்களை அமைத்துச் செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவாலை காவல்துறை பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி காவல்துறை பிரிவுகளில் தலா ஒவ்வொருவருமே, கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது