சின்னக் கலைவாணர் என்று போற்றப்படும், நடிகர் விவேக்கின் உடல் 78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டுள்ளது.
மாரடைப்பு மற்றும் மூச்சுத் திணறலை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் சாலிக் கிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆரம்பமாகியது.
இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக்கின் இளையமகள் அஸ்வினி, இறுதிச்சடங்குகளை செய்தார்.