மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான சின்ன்க கலைவாணர் விவேக், அவர் நாட்டிய மரங்களால் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
விவேக்கின் மறைவு குறித்து, இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்க்கு நேரடியாக வந்து தமிழ் மொழியின் சிறப்பையும், மாணவர்கள் பொது சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்ற கருத்துக்கள் அடங்கிய சிறப்புரையை வழங்கியமையும் நாம் எண்ணிப் பார்க்கின்றோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், ஈழத் தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்