மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விவேக்கின் பூதலுடல் இன்று மாலை விருகம்பாக்கத்தில் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரது மனங்களிலம் நீங்காத இடம்பிடித்துள்ள விவேக்கின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், அவரின் கலை மற்றும் சமூகச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கு அரசு ஆணையிட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.