வேளச்சேரி சட்டசபை தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு இடம்பெறுகிறது.
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள 92-எம் என்ற வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையம் நாளை காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்துகிறது.
இதற்காக வேளச்சேரி, சீதாராமன் நகர் முதல் தெருவில் உள்ள டி.ஏ.வி. பாடசாலையில், அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி முழுவதும் துணை ராணுவ படை மற்றும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 458 ஆண்கள் மட்டும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.