ஒன்ராறியோ அரசாங்கம் காவல்துறையினருக்கு புதிதாக வழங்கப்பட்ட அதிகாரங்களை திருத்தியமைத்துள்ளது.
வீடுகளில் தங்கும் உத்தரவை அமுல்படுத்தும் வகையில், திடீர் சோதனைகளை நடத்துவதற்கு காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களின்படி, ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் அல்லது சமூக ஒன்றுகூடலில் பங்கேற்பதாக சந்தேகிக்கப்பட்டால் மட்டுமே, காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முடியும் என்று ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பொது நிகழ்வு அல்லது சமூகக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கிறீர்கள் என்று ஒரு காவல்துறை அதிகாரி அல்லது பிற மாகாண குற்ற அதிகாரிகள் சந்தேகிப்பதற்கு காரணம் இருந்தால், நீங்கள் கட்டுப்பாடுகளுக்கு அமைய செயற்படுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்களை வழங்க வேண்டும் என்று ஒன்ராறியோ சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரி அல்லது பிற மாகாண குற்ற அதிகாரிகளுக்கு ஒவ்வொரு நபரும் உடனடியாக தகவல்களை வழங்க இணங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.