ஒரே நாளில் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றினால் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 4 ஆயிரத்து 362 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகினர் என்றும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவில் சுகாதார கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போதுள்ளதைப் போன்ற நிலைமை நீடித்தால், மே மாத இறுதியில் நாளாந்தம் 10 ஆயிரம் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கணிப்புகள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக பேரழிவு மிக்கதாக இருக்கும் என்று, தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 292 ஆக இருந்த கடந்த 7 நாள் சராசரி தொற்று, நேற்று 4 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.