திருகோணமலை சம்பூர், கடற்கரைச்சேனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால், வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூதூர்- கடற்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய, சந்திரகுமார் என்பவரே காயமடைந்துள்ளார்.
கடற்கரைச் சேனை- சம்புக்கலி பகுதியில் உள்ள வயலுக்கு சென்ற போதே அவர் காட்டு, யானையின் தாக்குதலுக்கு உள்ளானார் என்று தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த அவர், சம்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு ,மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.