கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4 ஆயிரம் தொடருந்து பெட்டிகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக இந்திய தொடருந்து துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
இதனை தொடர்ந்தே, தொடருந்து பெட்டிகள் கொரோனா சிகிச்சை விடுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
இதுவரை 4000 பெட்டிகள் கொரோனா சிகிச்சை விடுதிகளாக மாற்றப்பட்டு, 16 மண்டலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தலா 800 படுக்கைகளுடன் 50 தொடருந்து பெட்டிகள் கொரோனா விடுதிகளாக மாற்றப்பட்டு, டில்லியின் ஜகுர் பஸ்தி தொடருந்து நிலையத்திலும், 25 பெட்டிகள், ஆனந்த் விஹார் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.
மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப நாடு முழுவதும் 3 இலட்சம் படுக்கைகள், கொரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்படும் என்று, தொடருந்து துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.