ஆபிரிக்க நாடான சாட்டில் (Chad) உள்ள தமது அவசியமற்ற பணியாளர்களை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அறிவித்துள்ளது.
சாட் தலைநகர் ஜமீனா (Ndjamena) நோக்கி ஆயுதக் குழுவினர் இரண்டு முனைகளில் முன்னேறி வருவதை அடுத்தே அமெரிக்கா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துடன் பிரித்தானியாவும், தமது குடிமக்களை சாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளது.
சாட்டில் அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆறாவது முறையாகவும், ஜனாதிபதி இட்ரிஸ் டெபி (Idriss Deby) வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஆயுதக் குழுவினர் தலைநகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தென் லிபியாவில் இருந்து செயற்படும் இந்த ஆயுதக் குழுவினர் வெள்ளியன்று முக்கியமான தளம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.