கடந்த 2018 ஆம் ஆண்டு நஞ்சூட்டி பெண் ஒருவரை கொலை செய்தார்கள் என சந்தேகிக்கப்படும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவருக்கும் செக் குடியரசில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள செக் குடியரசின் காவல்துறையினர் அதற்கு ஏற்ற ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
செக் குடியரசின் கிராமம் ஒன்றில் இருந்த ஆயுத களஞ்சியசாலையை குறி வைத்து அவர்கள் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் காரணமாக செக் குடியரசிற்கு ஏற்பட்ட இழப்புக்கள் மற்றும் தாக்கங்கள் குறித்த விபரங்களை பிரதமர் அன்ரேஜ் பாபிஸ் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்