இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் – மல்லியப்பு சந்தி பகுதியில் மகளீர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்தினை வெளியிட்டதாகவும் அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை ஆறுமுகன் தொண்டமான் அபிவிருத்தி மன்றத்தினை திறந்து வைப்பதற்காக கொட்டக்கலையில் பிரதமரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவோடு ஜீவன் தொண்டமான் கொட்டக்கலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது