கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசினால் வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு அமைய, தினமும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
மே மாதம் நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே இரவில் அரசு, தனியார் போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.