ஆபிரிக்க நாடான நைஜரின் மேற்குப் பகுதியில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மாலி எல்லையில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் நடந்து கொண்டிருந்த இறுதிச் சடங்கு ஒன்றில், உந்துருளிகளில் சென்ற ஆயுதபாணிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலியில் இருந்து வந்த ஆயுதபாணிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.
மாலி, நைஜர் மற்றும் புர்கினோ பாசோ ஆகிய நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருவதுடன், பொதுமக்களின் கால்நடைகளையும் அபகரித்துச் செல்வது வழக்கம் என்று தகவல்கள் கூறுகின்றன.