கனேடிய அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் இத்தாலிக்கான தூதுவராக பெயரிடப்பட்டுள்ளார்.
எயர் மார்ஷல் சுமங்கல டயைசை சிறிலங்கா அரசாங்கம், கனடாவுக்கான தூதுவராக நியமித்திருப்பதாக, அறிவித்திருந்தது.
எனினும், அவரது நியமனத்தை ஒட்டாவா அரசாங்கம் உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது, இத்தாலிக்கான தூதுவராக அவரை சிறிலங்கா அரசாங்கம் பெயரிட்டுள்ளது.
எயர் மார்ஷல் சுமங்கல டயசின் நியமனம் தொடர்பான நியமனக் கடிதம் றோமில் உள்ள இத்தாலி வெளிவிவகாரப் பணியகத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.