யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட மேலும் 12 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா மருத்துவமனை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 404 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 10 பேரில், யாழ். காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள நான்கு பேரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், பருத்தித்துறை சுகாதார அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், உடுவில் சுகாதார அதிகாரி பிரிவுகளில், தலா ஒருவருக்கும், யாழ். போதனா மருத்துவமனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது என்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்