உலக சக்திகளுடனான ஈரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக வியன்னாவில் நடந்த மற்றொரு சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான், சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களுடன் ஒஸ்திரிய தலைநகரில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
2018 ல் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி, ஈரான் மீது ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.
இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானிய துணை வெளிவிவகார அமைச்சர், இது எளிதான பாதையாக இருக்காது என்றாலும். சில கடுமையான வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.