ஹமில்டன் மேற்கு மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீடு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து, தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Clifton Downs வீதியில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில், இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, தீயணைப்பு அதிகாரிகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.
எனினும், அவர்கள் அங்கு சென்ற போது தீப் பரவல் ஏதும் காணப்படவில்லை என்றும், ஆனால் வீடு முற்றாக தரைமட்டமாகியிருந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அருகில் இருந்த பல வீடுகளும் இந்த வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்திருந்தன என்றும், தீயணைப்பு சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.