தமிழர் தாயத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை வெளியேறக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து நிபந்தனையற்ற பேச்சு நடத்தக் கோரியும், உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதி’யின் 33 ஆவது நினைவேந்தல் இன்றாகும்.
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில், 1988ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் நாள் அன்னையர் முன்னணியின் சார்பில், அன்னை பூபதி கணபதிப்பிள்ளை சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
எனினும், அவரது கோரிக்கைகளை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாத நிலையில், அன்னை பூபதி ஏப்ரல் 19ஆம் நாள் உயிர்நீத்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்கள் அன்னை பூபதியின் 33 ஆவது ஆண்டு நினைவு நாளை, இன்று அனுசரிக்கின்றனர்.