கொவக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை 10 மடங்கு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீச்சகப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், கொரோனா சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தாயரிப்பு மே மாதத்திற்குள் 74.1 இலட்சமாக இரட்டிப்பாகப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த மருந்தின் தயாரிப்பை அதிகரிப்பதற்கு 20 உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும், பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறையும் கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.