பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை மீண்டும் ரத்து செய்துள்ளார்.
பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற பொறிஸ் ஜோன்சன் முதலாவது முக்கிய பயணத்தை, இந்தியாவுக்கு, மேற்கொள்ளவிருந்தார்.
பிரித்தானியாவில் அப்போது, புதிய உருமாறிய கொரோனா பரவத் துவங்கியதால் கடைசி நேரத்தில் அந்தப் பயணம் கைவிடப்பட்டது.
இதன் பின்னர், ஏப்ரல் 26 ஆம் நாள் தொடக்கம், நான்கு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதற்கு அவர், திட்டமிட்டிருந்தார்.
இந்தியாவில் தற்போது கொரோனா அதிவேகமாக பரவுவதால் பொறிஸ் ஜோன்சனின் இந்திய பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.