ஒன்ராறியோவில் நேற்று புதிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் மிகச் சிறிய சரிவு காணப்பட்ட போதும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம், 4 ஆயிரத்து 362 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட ஒன்ராறியோவில் நேற்று 4 ஆயிரத்து 250 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 18 மரணங்களும் நேற்று பதிவாகியிருக்கின்றன.
அதேவேளை, மாகாணத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 726இல் இருந்து, 741 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 526 பேர் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 65 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 2ஆயிரத்து 107 ஆக உயர்ந்துள்ளது.