காலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து சீனாவும் அமெரிக்காவும் செயற்பட இணங்கியுள்ளன.
சீன, காலநிலை மாற்றத்துறை பிரதிநிதி ஷீ ஹென்ஹூவா (Xi HAIHUWA) மற்றும் அமெரிக்க பிரதிநிதி ஜோன் கெரிக்கும் (JHON KERRY) இடையே ஷங்காயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய இரு நாடுகளும் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியான கரியமில வாயுவை மட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டிலும் சீனா கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (XI JIN PING) இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் எந்த கருத்தும் வெளியிடவில்லை.