யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றினால், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்வியங்காடு, வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த 77 வயதுடைய முதியவர் ஒருவரே, யாழ்.போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்தை சுகாதார விதிமுறைகளின் கீழ் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர், திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் 11 பேர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவர் என, யாழ்ப்பாணத்தில், 13 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்குமே தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.