புதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவசர தூதரக சேவைகளுக்காக +91-11-23010201 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது slhc.newdelhi@mfa.gov.lk என்ற மின்னஞ்சலிலோ அழைக்குமாறும் உயர் ஸ்தானிகராலயம் பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளது.