டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று இரவு முதல் வரும் 26-ம் நாள், வரையான ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய காரணங்கள் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.